புதுவை சித்தர் பீடங்கள்
அன்புடையீர் வணக்கம்,
நமது சமய வழிபாட்டிலே இறைவனை அடைய பற்பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் சைவ நெறியில் சத்புத்ர மார்கம், தாச மார்கம், சக மார்கம், குரு மார்கம் எனச் செழுமையான மார்கங்கள் நான்கு இருப்பினும், ஆகச்சிறந்த வழியாக ஒரு குருவின் வாயிலாக இறைவன் திருவடியை அடைவதே பேரின்பம். அவ்வாறு குருவாய் வந்தருளி நமையெல்லாம் ஈடேறச் செய்த சில அற்புதமான பல அருளாளர்களை, சித்தர்கள்/சித்த பெருமக்கள் என போற்றி வணங்குவதுண்டு.
தமிழகத்திலே பற்பல காலங்களில் பற்பல இடங்களில் பல சித்த புருஷர்கள் தோன்றி பல சித்துக்கள் செய்தும் மக்களை நல்வழிப்படுத்தி உய்திட வழிச்செய்துள்ளனர்.
அவ்வாறு பல சித்தர்கள் தோன்றிய புண்ணிய தலம் இன்றைக்கு புதுச்சேரி, புதுவை, பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் "வேதபுரி" என்ற தலமும் ஒன்று.
ஐம்பதிற்கும் மேற்பட்ட சித்த புருஷர்கள் இந்த கடற்கரை தலமான வேதபுரியில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு, செய்திட்ட அருட்திறங்கள், முக்தி பெற்ற முறை போன்ற செய்திகளை கேட்கும் பொழுதே நமது உடம்பெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது சிந்தையினை சிவத்தில் மூழ்கச்செய்கின்றது.
படித்து, படங்களாய் பார்த்து மகிழ்வதை விட, சித்தர் பீடங்களுக்கு நேரிலேயே சென்று தரிசித்து அந்த பேரானந்த அனுபவத்தினை அனைவரும் பெற்று மகிழவே இந்த கட்டுரை .
28 சித்தர்களின் ஜீவ சமாதிகளின் பட்டியலை இங்கே அளித்துள்ளோம். ஆதி சித்த குருவான முருகப்பெருமானை முதலாவதாகவும், திருவடி பேறு கிட்டியருளும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனமர் வேதபுரிஸ்வரர் திருக்கோயிலை முப்பதாவது தலமாகவும் வைத்து பட்டியல் சமைத்துள்ளோம்.
அனைத்து தலத்திற்கும் ஒரு புகைப்படமும், ஒருங்கிணைத்த பட்டியல் கொண்ட கூகிள் மேப் வழிகாட்டியும் இணைத்துள்ளோம்.
அனைவரும் இச்செய்திகளை பயன்படுத்தி புதுவை சித்தர்களின் ஜீவ சமாதி திருத்தலங்களை தரிசித்து வழிபட்டு மகிழவும்.
அன்புடன்,
என்றும் சைவ நெறியில்
அடியார்க்கும் அடியேன்சைதை சு. சுரேஷ் பிரியன்
+91 95000 64880
அன்புடன்,
என்றும் சைவ நெறியில்
அடியார்க்கும் அடியேன்சைதை சு. சுரேஷ் பிரியன்
+91 95000 64880
தங்களது மேலான கருத்துக்களையும், இக்கட்டுரை பற்றிய அனுபவங்களையும் கீழே கமெண்ட் செய்திடவும்
1. ஆதி சித்தர் - முருகப்பெருமான் |
2.ஸ்ரீ குண்டலினி சித்தர் |
3.ஸ்ரீ கடுவேளி சித்தர் |
4.ஸ்ரீ லட்சுமண சுவாமிகள் |
5.ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் |
6.ஸ்ரீ குரு சித்தாந்த சுவாமிகள் |
7.ஸ்ரீ
வேதாந்த சுவாமிகள் |
8.ஸ்ரீ
அக்கா சுவாமிகள் |
9.ஸ்ரீ
நாகலிங்க சுவாமிகள் |
10.ஸ்ரீ
தொள்ளை காது சுவாமிகள் |
11.ஸ்ரீ
கதிர்வேல் சுவாமிகள் |
12ஸ்ரீ
கணபதி சுவாமிகள் |
13ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் |
& 14.ஸ்ரீ
பெரியவருக்கு பெரியவர் |
15.ஸ்ரீ
சடையப்பர் சாமிகள் |
16.ஸ்ரீ
சுப்ரமணிய அபிரல சச்சிதானந்த சுவாமிகள் |
17.ஸ்ரீ
மண்ணுருட்டி சுவாமிகள் |
18.ஸ்ரீ
சக்திவேல் பரமானந்த சுவாமிகள் |
19.ஸ்ரீ
வண்ணார பரதேசி சுவாமிகள் |
20.ஸ்ரீ
தேங்காய் சுவாமிகள் |
21.ஸ்ரீ
ராம் பரதேசி சுவாமிகள் |
22.ஸ்ரீ
தட்சணாமூர்த்தி சுவாமிகள் |
23.ஸ்ரீ
குருசாமி அம்மாள் சுவாமிகள் |
24.ஸ்ரீ
மகான் படே சாஹிப் |
25.ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் |
26.ஸ்ரீ
அம்பலத்தாடி அப்பர் சுவாமிகள் |
27.ஸ்ரீ
அழகப்பர் சுவாமிகள் |
28.ஸ்ரீலலஸ்ரீ
அருள்சக்தி அன்னை |
29.ஸ்ரீ
மொட்டை சுவாமிகள் |
30.அருள்மிகு
திரிபுரசுந்தரி உடனமர் வேதபுரீஸ்வரர்
திருச்சிற்றம்பலம்
|
அருமை ஐயா சித்தர்களின் வாழ்வியலை பின்பற்றும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது மிக பெரிய உதவியாக இருக்கும்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteதிருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையான தகவல்!! சேகரித்து அளித்தமைக்கு நன்றி!!🙏
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Delete