திருச்சிற்றம்பலம்
"கடல் சூழ் திருநாகை காரோணத்தின் எழில்மிகு நாற்பது
திருத்தலங்கள்"
அன்பர்களுக்கு
வணக்கம்,
கடல்சூழ் நாகை, கற்றார் பயில் கடல் நாகை, கல்லினால் மதில் நாகை, கதிகமழ்
நாகை, சோலை குலவு நாகை, கலங்கள் சேர் கடல் நாகை" என்று அப்பர் சுவாமிகளால்
போற்றப்படும் திருநாகை காரோணத் திருத்தலம் சோழ நாட்டின் மிகமுக்கிய
திருத்தலமாகவும், சோழர்களின் மிகமுக்கிய துறைமுக நகரமாகவும் விளங்குகின்றது.
சென்ற
ஆண்டு 29.08.2019, ஆவணி ஆயில்யம், அதிபத்த நாயனார் குருபூசை, தங்க மீன் பிடித்தல்
பெருவிழாவை முன்னிட்டு நாகை திருத்தலங்களை வழிபட்டு மகிழ நாகை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் உள்ள தலங்களை ஆய்ந்த பொழுது எண்ணிலடங்கா திருக்கோயில்கள்
இருப்பதை அம்மையப்பர் பல புதிய அன்பர்களின் அறிமுகத்தால் நமக்கு உணர்த்தி அருளினார்.
அதுமட்டுமா நலிவுற்ற திருக்கோயில்கள் சிலவற்றில் உழவாரப் பணி செய்திடவும், அதன்
விளைவாய் பல நல்ல உறவுகளையும் இறைவன் ஏற்படுத்தி அருளியுள்ளார். என்னே ஈசனார்
கருணை!!!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - என்ற வாய்மொழிக்கு ஏற்ப
பல அன்பர்களும் இத்திருத்தலங்களை சென்று தரிசிக்க ஏதுவாக நாகை திருத்தலங்களை
பற்றிய இந்த இடுகையை வடித்துள்ளேன்; படித்து திருத்தலங்களை வழிபட்டு மகிழுங்கள்.
நாகைக்கு கிழக்கு எல்லை - வங்கக் கடல்
நாகையின் மேற்கு எல்லை - கீழ்வேளூர்
நாகையின் வடக்கு எல்லை - திருநாகூர்
நாகையின் தெற்கு எல்லை – திருவேளாங்கண்ணி
இவ்வாறு
நாம் பூகோள முறையில் பார்த்தல் - மூன்று பாடல் பெற்ற திருத்தலங்களும், இரண்டு
திவ்ய தேசங்களும், பன்னிரு சிவராஜதானி திருத்தலங்களும், முருகன் வழிபட்டு வீரஹத்தி
தோஷம் நீங்கப்பெற்ற பஞ்ச கடம்ப திருத்தலங்களும், பஞ்ச குரோச திருத்தலங்கள் அல்லது
சிவாலய ஓட்ட திருத்தலங்கள் இருப்பது ஒன்றும், பிற தலங்கள் மூன்று என பல
திருத்தலங்கள் உள்ளன.
தலங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பகுப்பில்
உள்ள தலம் மற்றோரு பகுப்பிலும் காணப்படும். அனைத்தையும் ஒப்பிட்டு கணக்கிட்டு
பார்த்தால் "கடல் சூழ் திருநாகை காரோணத்தின் எழில்மிகு நாற்பது
திருத்தலங்கள்" எனக் கூறலாம். மூன்று
முழு நாட்ககளில் இவையனைத்தையும் தரிசித்து தரிசித்து வழிபட்டு மகிழலாம்.
விரிவான வழிகாட்டுதல், pdf வடிவில் இத்திரு தலங்கள் பற்றிய விபரங்கள், கூகிள் லோகேஷன் குறியீடு, 40 திருத்தலங்களுக்கு தல யாத்திரை ஏற்பாடு என அனைத்து உதவிகளுக்கு எளியேனை தொடர்புகொள்ளலாம்.
நன்றி!!! அன்பே சிவம்!!!
அன்புடன் என்றும்
சைவ நெறியில் அடியார்க்கும் அடியேன் சைதை சு. சுரேஷ்பிரியன்
நிறுவனர் & தலைவர் "நால்வரின்பாதையில்...."
276 திருமுறைபாடல்பெற்றதிருத்தலயாத்திரைகுழு
திருகாரணீச்சரம், சைதாப்பேட்டை, சென்னை -600 015
+91 95000 64880, +91 9940274980 naalvarinpaathayil@gmail.com
0 comments:
Post a Comment