அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நால்வர் பெருமக்கள் அருளிய திருமுறைகள் பாடப் பெற்ற தலங்கள் 276 என அறியப்படுகின்றது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற மணிவாசகரின் வாக்கிற்கு ஏற்ப எம்பெருமான் திருவருள் கூட்டுவித்தமையால் "நால்வரின் பாதையில்" என்ற ஓரு குழுவாக நால்வர் காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றியும், அவர்கள் தரிசித்து பேறுபெற்ற பல தலங்களை பல அடியார் பெருமக்களுடன் தரிசித்து வாழ்வினில் பல வளங்கள் பெற்று சைவ சமயத்தை பேணி போற்றவே இந்த ஒருங்கிணைப்பு.....
ஒத்த கருத்து ஒத்த பண்புடைய அடியார் திருக்கூட்டம்...
2019 ஆம் ஆண்டின் நமது வழிபாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் யாத்திரைகள் ஓர் கண்ணோட்டம் ...
சற்றே மலைப்பாகத் தான் உள்ளது. இவை அனைத்துமே அம்மையப்பர் திருவருளாலும் முருகப்பெருமானின் குருவருளாலும் நமது குழுவின் அடியார்கள் மற்றும் அன்பர்களின் உயர்ந்த எண்ணங்களாலும் பல தன்னார்வலர்களின் உடலுழைப்பால் மட்டுமே சாத்தியமானது....
அனைவருக்குமே அடியேனின் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்...
மேலும் இது போன்று பல உயரங்களை நாம் அடைய இன்று போல் என்றும் அனைவரும் இந்த எளியேனுக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் இருந்திட விழைகின்றேன்.
அன்புடன்,என்றும் சைவ நெறியில்
அடியார்க்கும் அடியேன் சைதை சு. சுரேஷ் பிரியன்
நிறுவனர் & தலைவர்
"நால்வரின் பாதையில்...."
276 திருமுறை பாடல் பெற்ற திருத்தல யாத்திரை குழு திருகாரணீச்சரம், சைதாப்பேட்டை,
சென்னை -600 015 + 91 9940274980, priyanstar@gmail.com
மேலும் பல யாத்திரை கள் மேல்கொள்ள ஆடல்வல்லீன் துணை நிற்ப்பார்.
ReplyDeleteCongrats to our team keep rocking die
ReplyDeleteSorry by mistake
DeleteIt's keep rocking.
Thank you for the wishes.. your name please
Deleteவாழ்த்துகள். பாராட்டுகள். சிவாயநம
ReplyDeleteபாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteCan you please share the tour schedule for 2020?
ReplyDelete