சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணம்
நூல் கட்டமைப்பு - ஓர்
பார்வை
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி!
- கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத் தினைவளமும் தெரித்துக் காட்ட
மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர்க் குல கவியே வல்லான் அல்லால்
கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்!
- மாதவச் சிவஞான சுவாமிகள்
காண்டங்கள் இரண்டு, சருகங்கள் பதின்மூன்று,புராணங்கள் எழுபத்திரண்டு, நாயன்மார்கள் அறுபத்து மூவர், தொகையடியார்கள் ஒன்பது, மொத்த பாடல்கள் 4286 - நாலாயிரத்து இருநூற்று எண்பத்தாறு
1.திருமலைச் சருக்கம்
2.தில்லைவாழந்தணர் சருக்கம்
3.இலைமலிந்த சருக்கம்
4.மும்மையால் உலகாண்ட சருக்கம்
5.திருநின்ற சருக்கம்
6.வம்பறா வரிவண்டுச் சருக்கம்
7.வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
8.பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்
9.கறைக்கண்டன் சருக்கம்
10.கடல் சூழ்ந்த சருக்கம்
11.பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12.மன்னியசீர்ச் சருக்கம்
13.வெள்ளானைச் சருக்கம்
அருமையான பதிவு
ReplyDelete